ஆன்மிகம் வீடியோ » நாகூர் தர்கா 462ஆம் ஆண்டு கந்தூரி விழா பிப்ரவரி 16,2019 11:00 IST
நாகை, நாகூர் ஷாஹூல் ஹமீத் பாதுஷா நாயகம் தர்காவின் 462ஆம் ஆண்டு கந்துாரி விழா, பிப்ரவரி 6 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் வைபவத்தை முன்னிட்டு, சந்தனக் கூடு ஊர்வலம், நாகை அபிராமி அம்மன் திருவாசலில் இருந்து துவங்கியது. சாம்பிராணி சட்டி, நகரா மேடை உட்பட 25 க்கும் மேற்பட்ட மின் அலங்கார ரதங்கள் சந்தனக்கூட்டின் முன்னும் பின்னும் சென்றன. ஊர்வலம் தர்கா அலங்காரவாசலை வந்தடைந்த பின் ரதத்தில் இருந்து சந்தனம் நிரப்பப்பட்ட குடங்கள் தர்காவிற்குள் கொண்டு செல்லப்பட்டது. தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாகிப் துவா ஓதிய பின் சந்தனம் பூசும் வைபவம் நடந்தது. விழாவில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான யாத்ரீகர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து