பொது » இந்திய ஆவணபடத்திற்கு ஆஸ்கார் பிப்ரவரி 25,2019 13:00 IST
அமெரிக்கவின் லாஸ் ஏஞ்சல்சில் 91வது ஆஸ்கார் விருது வழங்கும்விழா நடக்கிறது. இந்த விழாவில் இந்திய ஆவண குறும்படமான ("period.end of sentence)'பீரியட் எண்ட் ஆஃப் செண்டன்ஸ்' என்ற படத்திற்கு சிறந்த ஆவண குறும்படத்திற்கான விருது கிடைத்துள்ளது. ரைகா ஜெஹ்தாப்சி (Rayka Zehtabchi )இயக்கியுள்ள இந்த படம், மாதவிடாய் குறித்த மூட நம்பிக்கைகளை எதிர்த்து இந்திய பெண்கள் எப்படி போராடுகிறார்கள் என்பதை விளக்குகிறது. விலை குறைந்த நாப்கினை தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தத்தின் கருத்துகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாப்கின் பிரச்சனை இந்திய பெண்களுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை அவர் அந்த படத்தில் கூறியுள்ளார். பீரியட் படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளதற்கு, முருகானந்ததிற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து