பொது » கட்டுக்குள் வந்த காட்டுத்தீ பிப்ரவரி 26,2019 19:54 IST
நீலகிரி முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் பரவிய காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தெப்பக்காடு - மசினகுடி சாலையில் மர்மநபர்களால் பற்றிய காட்டுத்தீ காற்றின் வேகம் காரணமாக மளமளவென பரவியது. இதில் மன்றாடியார், மாயார், ஜெய்தேவ் வனப்பகுதிகள் பாதிக்கப்பட்டன. வனத்துறையினர் 200க்கும் மேற்பட்டோர் போராடி காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தற்போது வனத்தில் நெருப்புடன் இருக்கும் மரக்கட்டைகளை தண்ணீர் ஊற்றி அணையில் பணி நடைபெற்று வருகிறது. மசினகுடி டாக்சி டிரைவர்கள் யூனியனை சேர்ந்தவர்களும் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் யாரும் வராத நிலையில் சுமார் 150 டிரைவர்கள் வனத்துறையினருக்கு உதவினர்.
வாசகர் கருத்து