சம்பவம் » லஞ்ச தாசில்தார் கைது பிப்ரவரி 27,2019 19:46 IST
கரூரை அடுத்த கொள்ளுதண்ணிபட்டியை சேர்ந்த சார்லஸ் பாலு என்பவர், தனது இடத்திற்கு பட்டா வேண்டி கடவூர் தாசில்தார் கற்பகத்தை அணுகியுள்ளார். பட்டா வழங்க தாசில்தார் 2,500 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சார்லஸ் பாலு லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அவர்கள் அறிவுரையின் பேரில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை சார்லஸ் பாலு அளித்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கற்பகத்தை கையும் களவுமாக பிடித்தனர்.
வாசகர் கருத்து