பொது » யாருக்கு வேணும் ஆறுதல்? பிப்ரவரி 28,2019 13:00 IST
பாகிஸ்தான் பிடியில் உள்ள இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனின் பெற்றோர் சென்னையில் வசிக்கின்றனர். அவர்களுக்கு ஆறுதல் சொல்ல போனார்கள் பிரேமலதா விஜயகாந்த், டி. ஆர் பாலு ஆகியோர். ஆனால் அங்கு அவர்களுக்கு கிடைத்தது முற்ரிலும் வித்யாசமான அனுபவம். அபிநந்தன் வர்தமானின் அப்பாவும் விமானப்படை மார்ஷலாக இருந்தவர். பெயர் சிம்மகுட்டி வர்தமான். ”எங்களுக்கு எதுக்கு ஆறுதல்? என் மகன் வீரன். அவன் நிச்சயம் திரும்பி வருவான். அபிநந்தன் இந்த நாட்டின் மகன். அவனை மீட்க இந்தியா நடவடிக்கை எடுக்கிறது. அதானால் நீங்கள் யாரும் கவலைப்படாமல் தைரியமாக இருங்கள்” என்று இரு தலைவர்களுக்கும் ஆறுதல் சொல்லி விடை கொடுத்திருக்கிறார் சிம்மக்குட்டி வர்த்தமான். அபியின் மனைவி, குழந்தைகள்.. என்று விருந்தாளிகள் விசாரித்தபோது, “அவங்க காஷ்மீர்லதான் இருக்காங்க. எங்கள மாதிரியே தைரியமா இருக்காங்க; டோன்ட் வொர்ரி..” என்று சொன்னாராம் அபியின் அப்பா. வரிசையில் நின்று அபி பெற்றோருக்கு ஆறுதல் சொல்லி விடியோ எடுக்க ரெடியான பல அரசியல்வாதிகள் இதனால் ஏமாற்றம் அடைந்தனர்.
வாசகர் கருத்து