பொது » திருச்சியில் ரூ.5 கோடி போதை பறிமுதல் மார்ச் 10,2019 00:00 IST
திருச்சியில் இருந்து மலேசியா செல்லும் விமானத்தில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக, தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பயணிகளிடம் சோதனை நடத்தினர். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்த ஆரோக்கிய சாமி என்பவர், 5 கோடி ரூபாய் மதிப்புள்ள, 10 கிலோ மெத்தாகுவாலோன் என்ற போதைப் பொருளை, பாசுமதி அரிசி பாக்கெட்டுகளில் பதுக்கி வைத்திருத்தார். அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை உதவி கமிஷனர் பண்டாரம் தலைமையிலான அதிகாரிகள், ஆரோக்கிய சாமியை கைது செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து