அரசியல் » ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மார்ச் 10,2019 16:16 IST
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள என்.ஆர்.காங் தலைவர் ரங்கசாமி, உப்பளம் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அவரை அதிமுக எம்எல்ஏக்கள் அன்பழகன்,அசனா,வையாபுரி மணிகண்டன்,பாஸ்கர் ஆகியோர் வரவேற்றனர். அதிமுகவினர் மத்தியில் பேசிய ரங்கசாமி, புதுச்சேரியில் அதிமுக-என்.ஆர். காங் ஆட்சி அமைந்து இருக்க வேண்டும். தகவல் தொடர்பில் சிறிய இடைவேளையால் ஆட்சியை பிடிக்கவில்லை என்றார். மக்களவை தேர்தலில் ஒவ்வொரு தொகுதிகளிலும் கூடுதலான ஓட்டுக்களை பெற முடியும். இந்த தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல். ஆட்சி மாற்றம் வர வேண்டும் என அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்..
வாசகர் கருத்து