Advertisement

பொது » நூறுசதவீதம் ஓட்டு வேண்டாமா? நீதிபதிகள் மார்ச் 12,2019 00:00 IST

பொது » நூறுசதவீதம் ஓட்டு வேண்டாமா? நீதிபதிகள் மார்ச் 12,2019 00:00 IST

மதுரையில் ஏப். 18 ம் தேதி நடைபெறும் சித்திரை திருவிழா தேரோட்டத்தில், மதுரை மட்டும் இன்றி, சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோரும் பங்கேற்பர். தேரோட்டத்தை தொடர்ந்து 19ம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்கும் என்பதால், பெரும்பாலானோர் மதுரை வைகையாற்றில் இரவு தங்கி கள்ளழகரை தரிசித்து செல்வர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வன்று தான் தமிழகத்தில் லோக்சபா தேர்தலும், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்த உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருவிழாவன்று தேர்தல் நடத்தினால் ஓட்டு சதவீதம் பாதிக்கப்படும் என்பதால், தேர்தல் தேதியை மாற்றக் கோரி, வழக்கறிஞர் பார்த்தசாரதி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், தேரோட்டம் நடைபெறும் இடத்தை சுற்றி பல வாக்கு சாவடிகள் உள்ளதால் அவற்றுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்வதில் சிரமம் ஏற்படும். வெளியூர் மக்களும் வருவதால் பாதுகாப்பு வசதிகளில் பாதிப்பு ஏற்பட்டு சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தேர்தல் தேதியை மாற்ற பரிசீலனை செய்ய வேண்டும் என முறையிட்டார். அதற்கு இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் காவல்துறை ஆணையர் தரப்பில் தேர்தலை நடத்துவது சாத்தியம் என, பதில் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், இது முக்கியமான விழா. இது தொடர்பாக காவல் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஏன் தெரிவிக்கவில்லை? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, தேர்தலில் 100% வாக்காளர்கள் ஓட்டு அளிக்குமாறு தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்கிறது. அவ்வாறு இருக்கும் போது பல லட்சம் பேர் திருவிழாவிற்கு வந்தால் 100% எவ்வாறு சாத்தியமாகும் என கேள்வியெழுப்பினர். மதுரை மட்டுமின்றி திருவண்ணாமலை, தேனியிலும் இதை நிலைதான் உள்ளது. எனவே தமிழகத்தில் தேர்தல் வாக்கு பதிவு தேதியை தள்ளி வைப்பது குறித்து தேர்தல் ஆணையம் வியாழன் அன்று பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 00:53 டில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்

டில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்

play button 00:42 ஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்

ஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்

play button 00:52 முதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு

முதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு

play button 00:57 காவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்

காவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்

play button 00:37 கஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை

கஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை

play button 00:56 உள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை

உள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை

play button 06:21 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 07-12-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 07-12-2019 | Short News Round Up | Dinamalar

play button 03:14 சட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது


சட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது


play button 02:14 பழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'

பழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'

play button 02:40 KK நாடு ஆகிறதா தமிழ்நாடு?

KK நாடு ஆகிறதா தமிழ்நாடு?

play button 01:40 பிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி

பிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி

play button 03:43 தெரு நாய்களே… எனது நண்பர்கள்! | Street Dogs Maintenance | Madurai | Dinamalar |

தெரு நாய்களே… எனது நண்பர்கள்! | Street Dogs Maintenance | Madurai | Dinamalar |

play button 00:40 சக்திமாரியம்மன் கோயிலில் திருத்தேர் வைபவம்

சக்திமாரியம்மன் கோயிலில் திருத்தேர் வைபவம்

play button 03:00 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 07-12-2019 | மாலை 4 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 07-12-2019 | மாலை 4 மணி | Dinamalar

play button 01:02 வெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி

வெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி

play button 02:33 கனிவு… வரவேற்பு... தேனி மகளிர் ஸ்டேஷன் டாப் | Theni women police station winning 4th place | Theni | Dinamalar |

கனிவு… வரவேற்பு... தேனி மகளிர் ஸ்டேஷன் டாப் | Theni women police station winning 4th place | Theni | Dinamalar |

play button 01:56 புதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்

புதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்

play button 00:51 இந்திய வாதவியல் சங்க மாநாடு

இந்திய வாதவியல் சங்க மாநாடு

play button 00:35 போன் வாங்கினா வெங்காயம் FREE

போன் வாங்கினா வெங்காயம் FREE

play button 00:51 வெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி

வெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X