பொது » ஆபாச வீடியோ எடுத்த வீட்டில் சிபிசிஐடி சோதனை மார்ச் 13,2019 14:25 IST
பொள்ளாச்சி பாலியல் டார்ச்சர் தொடர்பான வழக்கில் சிபிசிஐடி ஐஜி ஸ்ரீதர் தலைமையில் விசாரணை தொடங்கியது. இந்த வழக்கில் அனைத்து கோணங்களிலும் முழுமையான நேர்மையான விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐஜி ஸ்ரீதர் கூறினார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசின் சின்னப்பம்பாளையத்தில் உள்ள பண்ணை வீட்டில் சிபிசிடிஐ போலீசார் சோதனையிட்டனர். இந்த வீட்டில்தான், இளம் பெண்களின் ஆபாச வீடியோ எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து