அரசியல் » நடத்தை விதிகளை மீறும் அதிகாரிகள் மார்ச் 14,2019 18:15 IST
தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. குறிப்பாக அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அழிக்கவும், பேனர்களை அகற்றவும், எம்.எல்.ஏ., அலுவலகங்களை மூடி சீல்வைக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை மயிலாடுதுறையில் தேர்தல் அதிகாரிகள் காற்றில் பறக்கவிட்டுள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு 4 நாட்கள் ஆகியும் பல்வேறு இடங்களில் அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள், பேனர்கள் அகற்றபடாமல் உள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அலட்சியமாகவும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும் இருக்கக்கூடாது, உடனடியாக மாவட்டம் முழுவதும் உள்ள விளம்பரங்களை அகற்றப்படவேண்டும். நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை தேர்தல் விதிமீறல்கள் இல்லாமல் ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்தவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து