அரசியல் » சீட்டு, நோட்டு, ஓட்டுக்காக அதிமுகவுடன் கூட்டு மார்ச் 23,2019 17:58 IST
சேலம் உடையாப்பட்டியில், கள்ளக்குறிச்சி எம்.பி., தொகுதி திமுக வேட்பாளர் கவுதம சிகாமணி ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போதுபேசிய அவர், திமுகவின் தேர்தல் அறிக்கை தான் ஹீரோ. இந்தியாவின் வில்லன் மோடி தான். புயல் பாதிப்புகள் ஏற்பட்டபோது தமிழகத்துக்கு வராத மோடி, ஓட்டுக்காக மட்டும் 4 முறை வந்துள்ளார். இந்த தேர்தலில் அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்த பாமகவும், தேமுதிகவும் தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பது சீட்டுக்காகவும் நோட்டுக்காகவும் ஓட்டுக்காகவும்தான் என்றார்.
வாசகர் கருத்து