'கோக்குமாக்கு' கோவாலு » பச்சமுத்துவுக்கு படிக்கத் தெரியலயே மார்ச் 25,2019 00:00 IST
திமுக கூட்டணி சார்பில், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் என்ற பச்சமுத்து, பெரம்பலூர் எம்.பி தொகுதியில் போட்டியிடுகிறார். மாவட்ட தேர்தல் அதிகாரி சாந்தாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்பொழுது உறுதிமொழி அறிக்கையை படிக்கச் சொன்னபோது, தடுமாறினார் பச்சமுத்து. பின்னர் அருகில் இருந்தவர் சொல்ல… சொல்ல… பச்சமுத்து உறுதிமொழியை வாசித்து முடித்தார். எம்.பி தொகுதிக்கு போட்டியிடுபவர் ஒரு உறுதி மொழியை கூட தானாக படிக்கத் தெரியவில்லையே, கூட்டணி கட்சியினர் தங்களுக்குள் முணுமுணுத்து கொண்டனர்.
வாசகர் கருத்து