அரசியல் » நல்ல நேரத்தில் வந்த வேட்பாளர்களால் சோதனை மார்ச் 25,2019 19:20 IST
வேட்புமனுத்தாக்கல் செய்ய செவ்வாயன்று கடைசி நாள் என்பதால், திங்களன்று அனைத்து தொகுதிகளிலும் வேட்பு மனுத்தாக்கல் களைகட்டியிருந்தது. 12 முதல் 1.30 மணிவரை நல்ல நேரம் என்பதால், அந்த நேரத்தில், ஒசூர் சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஜோதி பாலகிருஷ்ண ரெட்டி கூட்டணி கட்சி தொண்டர்கள் புடை சூழ வேட்பு மனுத்தாக்கல் செய்ய சப் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அதே நேரத்தில் திமுக வேட்பாளர் சத்யாவும் கூட்டணி கட்சியினருடன் வேட்புமனுத்தாக்கல் செய்ய வந்தார். இரண்டு கூட்டணி கட்சி தொண்டர்களும் ஒரே நேரத்தில் குவிந்ததால், கொடிகளையும், பதாகைகளையும் ஏந்தியபடி, போட்டி போட்டு கொண்டு முழக்கமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விதிமுறைகளை மீறி, 100 மீட்டருக்குள் நூற்றுக்கணக்கானவர்கள் கட்சிக்கொடிகளுடன் திரண்டதால், அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். சப் கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள தேன்கனிக்கோட்டை சாலையில் கடும் வாகன போக்குவரத்தும் ஸ்தம்பித்தது. ஆம்புலென்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கி தவித்தன. நல்ல நேரம் பார்த்து வந்த வேட்பாளர்களால் வாக்காளர்களான வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது.
வாசகர் கருத்து