அரசியல் » ஸ்டாலின் மீது தமிழக அரசு வழக்கு மார்ச் 29,2019 15:00 IST
திமுக தலைவர் ஸ்டாலின், கோடநாடுகொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக தவறான கருத்துகளை பிரசாரத்தின் போது தெரிவித்து வருகிறார். இது குறித்து பேச ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறி தமிழக அரசு சார்பில், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் கோடநாடு விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இதுகுறித்து பேசுவதை ஸ்டாலின் தவிர்க்க வேண்டும் என உத்தரவிட்டது. தமிழக அரசு மனு குறித்து, ஏப்ரல் 3ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி ஸ்டாலினுக்கு அறிவுறுத்தப்பட்டது,
வாசகர் கருத்து