அரசியல் » டீ கடையில் ஸ்டாலின் மார்ச் 31,2019 00:00 IST
பொதுக் கூட்டம் முடிந்து, கிருஷ்ணகிரியில் தங்கியிருந்த திமுக தலைவர் ஸ்டாலின், ஞாயிறன்று, ஆனந்த் தியேட்டர் ரோடு, ஸ்டேட் பேங்க் ரோடு, உழவர் சந்தை உள்ளிட்ட இடங்களில் நடைபயணமாக சென்று மக்களை சந்தித்து கைகுலுக்கி வாக்கு சேகரித்தார். செல்பி எடுக்க பலரும் முண்டியடிக்க, ஆங்காங்கே சிலர் அவருக்கு திருஷ்டி சுத்தி தேங்காய் உடைத்தனர். ரோட்டோர கடையில் அமர்ந்து டீ குடித்த ஸ்டாலின், அங்கு கூடியிருந்தவர்களிடமும் ஆதரவு திரட்டினார்.
வாசகர் கருத்து