சம்பவம் » சிக்கியது 50 பவுன் நகைகள் மார்ச் 31,2019 19:16 IST
தஞ்சாவூர், பட்டுக்கோட்டை புறவழிச்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். வங்கிக்கு பணம் எடுத்துக் கொண்டு செல்லக்கூடிய வாகனத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட 61 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் வருவாய் ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மயிலாடுதுறை மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன்கோயிலில் தனி தாசில்தார் இந்துமதி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 50 பவுன் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. உரிய ஆவனங்கள் இல்லாததால், அதனை பறிமுதல் செய்த பறக்கும்படையினர், கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
வாசகர் கருத்து