சம்பவம் » லாரி - கார் மோதல் 3 பேர் பலி ஏப்ரல் 06,2019 12:00 IST
வேலூர், ஆம்பூர் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையை நோக்கி சென்ற கார் முன்னாள் சென்ற லாரியின் பின்பக்கம் வேகமாக மோதியது. இதில் காரிலிருந்த திருப்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரவேலு ,அவரது மனைவி ஜெயலட்சுமி கார் ஓட்டுநர் வீரமணி ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆம்பூர் கிராமிய போலீசார் மூன்று பேரின் உடலையும் மீட்டு, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வாசகர் கருத்து