சம்பவம் » அரசு மருத்துவமனையில் மருந்தாளுனர் கொலை ஏப்ரல் 10,2019 00:00 IST
சிவகங்கை அரசு மருத்துவமனையில் மருந்தாளுனராக வேலைபார்த்தவர் தமிழ்ச்செல்வன். 36 வயதான இவருக்கும் ஒக்கூரை சேர்ந்த அழகுஜோதியின் மனைவி சாந்திக்கும் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. சாந்தியின் மூத்தமகன் அருண்குமார், தமிழ்ச்செல்வனுடன் தாய் பழகுவதை கண்டித்துள்ளார். சாந்தி தமிழ்ச்செல்வனுடன் தொடர்ந்து பழகி வந்ததால், ஆத்திரமடைந்த அருண்குமார், அரசு மருத்துவமனை வந்தார். பணியில் இருந்த தமிழ்ச்செல்வனை கத்தியால் குத்தி கொன்று, அங்கேயே சரண் அடைந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து