பொது » முதல் கட்ட லோக்சபா தேர்தல் வியாழனன்று நடக்கிறது. ஏப்ரல் 10,2019 19:30 IST
ஆந்திரா, தெலங்கானா, உ.பி., மகாராஷ்ட்ரா, காஷ்மீர் உட்பட 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது. மொத்தம் 1266 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக பா.ஜ., காங்கிரஸ் சார்பில் தலா 83 வேட்பாளர்கள் களம் காணுகின்றனர். தேர்தல் முன்னேற்பாடுகளில் தேர்தல் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அமைதியான முறையில் தேர்தல் நடக்க அந்தந்த மாநில போலீசார், மத்திய படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
வாசகர் கருத்து