அரசியல் » தோல்வி பயத்தில் தமிழக முதல்வர் ஏப்ரல் 15,2019 17:00 IST
புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு மக்களின் ஆதரவு உள்ளதாக தெரிவித்தார். என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியை ஒப்பிடும்போது தற்போதுள்ள காங்கிரஸ் அரசு அதிகளவில் அரிசி வழங்கியுள்ளது. இலவச அரிசி வழங்குவதில் ஆளும் காங்கிரஸ் அரசை குற்றம் சாட்ட என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்குத் தகுதியில்லை என கூறினார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தோல்வி பயம் காரணமாகவே மேகதாது விவகாரத்தில் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.
வாசகர் கருத்து