பொது » தமிழகத்தில் 70 சதவீத ஓட்டுப்பதிவு ஏப்ரல் 18,2019 20:50 IST
தமிழகத்தில் 38 லோக்சபா தொகுதிகளுக்கும், 18 சட்டசபைத் தொகுதிகளுக்கும் வியாழனன்று தேர்தல் நடந்தது. காலை 7 மணி முதலே ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது. மக்கள் ஆர்வத்துடன் வந்து ஜனநாயகக் கடமையாற்றினர். மதுரையை தவிர எஞ்சிய 37 லோக்சபா தொகுதிகளிலும் 18 சட்டசபை தொகுதிகளிலும் மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவடைந்தது. மாலை 6 மணி நிலவரப்படி 38 லோக்சபா தொகுதிகளில் 70 சதவீத ஓட்டுகள் பதிவானது. 18 சட்டசபைத் தொகுதிகளில் 72 சதவீத ஓட்டுகள் பதிவானது என்று, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறினார். லோக்சபா தொகுதியை பொறுத்தவரையில் அதிகபட்சமாக நாமக்கல்லில் 78. சதவீதமும், மத்திய சென்னை 57 சதவீதமும் ஓட்டுகள் பதிவானது. சட்டசபை இடைத்தேர்தலில் அதிகபட்சமாக அரூரில் 87 சதவீதமும், சாத்தூரில் 61 சதவீதமும் ஓட்டுகள் பதிவானது. 2014 லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 74 சதவீத ஓட்டுகள் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து