பொது » கே.ஆர்.பி., அணையை தூர்வர நேரம் வந்தாச்சு ஏப்ரல் 21,2019 18:46 IST
கிருஷ்ணகிரியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கேஆர்பி அணையில் உள்ள ஏழு மதகுகள் பழுதடைந்துள்ளதால், அணையில் உள்ள தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 22 அடிக்கு மட்டுமே இப்போது தண்ணீர் உள்ளது. இதில் 14 அடிவரை சேறும் சகதியும் நிறைந்துள்ளதாக கூறப்படுகிறது. வறட்சியால், அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளதால், இந்த சமயத்தில் அணையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பருவமழை துவங்குவதற்கு முன்பு, அணையை தூர் வாரி, மதகுகளையும் சரி செய்து வைத்தால், அதிகளவு மழைதண்ணீரை தேக்கிவைத்து, விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
வாசகர் கருத்து