சம்பவம் » பஸ் மோதி தொழிலாளி பலி ஏப்ரல் 22,2019 16:23 IST
பல்லடம் அருகே ராயர்பாளையத்தில் திருப்பூர் நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, வடமாநிலத்தை சேர்ந்த பனியன் தொழிலாளி சங்கர், இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றார். அதிவேகமாக வந்த பேருந்து, இருசக்கர வாகனத்தின்மீது மோதியதில், சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைகண்ட அப்பகுதி மக்கள், பேருந்து கண்ணாடியை அடித்து உடைத்தனர். தனியார் பேருந்துகள் அதிவேகத்தில் இயக்குவதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக மக்கள் தெரிவித்தனர். திருவண்ணாமலையை சேர்ந்த 7 பேர் கூலி வேலைக்காக டெம்போவில் பெங்களுருக்கு சென்று கொண்டிருந்தனர். ஒசூர் அருகே ஒமதேப்பள்ளியில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது டெம்போ வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில், வள்ளி என்ற பெண் உயிரிழந்தார். அவரது கணவர் பழனிவேல் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.
வாசகர் கருத்து