சம்பவம் » சொத்து தகராறு: தம்பியை சுட்டு கொன்ற அண்ணன் ஏப்ரல் 23,2019 00:00 IST
தூத்துக்குடி சின்னகடை தெருவைச் சேர்ந்தவர் பில்லா ஜெகன். திமுக நிர்வாகி அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர். பில்லா கெஜனுக்கும் அவரது தம்பி சிம்சனுக்கும் இடையே சொத்தை தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் திங்களன்று நள்ளிரவில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பில்லா ஜெகன், சிம்சனை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அவரது தொடைப் பகுதியில் குண்டு பாய்ந்து ரத்தம் பீறிட்டது. அதிக ரத்தப்போக்கால் மயங்கி விழுந்த சிம்சன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தம்பி இறந்ததும் பில்லா ஜெகன், இரவோடு இரவாக தலைமறைவானார். தூத்துக்குடி வடபாகம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தல் நடக்க உள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. எனவே, உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்போர், அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என, கலெக்டர் சந்தீப் நந்தூரி ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த நிலையில் துப்பாக்கியை ஒப்படைக்காமல் அண்ணனே, தம்பியை, சுட்டுக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர் கருத்து