பொது » விலங்குகளுக்கு இரையாக்கப்பட்ட யானையின் உடல் ஏப்ரல் 24,2019 13:37 IST
கோவை, மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட நெல்லித்துறை காப்புக்காடு அருகே தனியார் பாக்குத்தோப்பில் மின்சாரம் தாக்கி 40 வயதான காட்டு யானை இறந்தது. உடற்கூறாய்வு செய்யப்பட்ட யானையின் உடல், காராச்சி மரக்குட்டை வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, பிற மாமிச உண்ணி வனவிலங்குகளின் இரைக்காக போடப்பட்டது. பொதுவாக, இறந்த யானையின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு பின் புதைக்கப்படுவதுதான் வழக்கம். ஆனால், வன விலங்குகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், யானையின் உடல் முதல்முறையாக இரையாக்கப்பட்டுள்ளது. யானையின் உடலில் எந்த விஷத்தன்மையும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே இரையாக போடப்பட்டுள்ளது. யானையின் உடலை எந்தெந்த வன விலங்குகள் தின்று செல்கின்றன என்பதை தானியங்கி கேமராக்கள் மூலம் வனத்துறை கண்காணித்து வருகிறது.
வாசகர் கருத்து