பொது » வெடி சத்தத்தில் கொத்தாக மடிந்த கோழிகள் ஏப்ரல் 24,2019 15:38 IST
தாராபுரம் ராம்நகரில் நடந்த கோயில் திருவிழாவில் அனுமதி பெறாமல் அதிக சத்தத்துடன் கூடிய பட்டாசு வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோயில் அருகேயுள்ள அர்ஜுன் என்பவரது கோழிப்பண்ணையில், நூற்றுக்கும் மேற்பட்ட கோழிகள் பயத்தில் செத்து மடிந்தன. கோயில் நிர்வாகத்திடம் பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று கூறியும் கேட்கவில்லை என்றும், இறந்த கோழிகளுக்கு நஷ்டஈடு பெற்றுத்தர வலியுறுத்தி போலீசாரிடம் புகார் அளித்துள்ளதாகவும் அர்ஜுனன் தெரிவித்தார்.
வாசகர் கருத்து