பொது » அறந்தாங்கியில் அம்மன் சிலை கண்டெடுப்பு ஏப்ரல் 26,2019 00:00 IST
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கோங்குடி கிராமத்தில், ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கான கட்டுமான பணி தொடங்கியது. பேஸ்மென்ட் அமைப்பதற்கான, பள்ளம் தோண்டும் போது, அங்கே அம்மன் சிலை ஒன்று தென்பட்டுள்ளது. மேலும் ஆழமாக தோண்டியபோது சிலைக்கான பீடம் மற்றும் கிரீடமும் கிடைத்துள்ளது. 80கிலோ எடையில் அம்மன் சிலை, 70 கிலோ எடையில் பீடம் மற்றும் கிரீடம் ஆகியவை, கோட்டாட்சியர் சூரியபிரபு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. சிலை கண்டெடுக்கப்பட்ட இடத்தின் அருகே பழமையான சிவன் கோயில் உள்ளது. எனவே, சிலைகளும் பழமையானதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து