Advertisement

பொது » குழந்தை விற்பனை; 3 புரோக்கர்கள் கைது ஏப்ரல் 27,2019 18:27 IST

பொது » குழந்தை விற்பனை; 3 புரோக்கர்கள் கைது ஏப்ரல் 27,2019 18:27 IST

பிறந்த குழந்தைகளை லட்சக்கணக்கில் பேரம் பேசி சட்ட விரோதமாக விற்பனை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் நர்ஸ் உதவியாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற அமுதவள்ளியும், அவருக்கு உடந்தையாக இருந்த கணவர் ரவிச்சந்திரனும் கைது செய்யப்பட்டனர். குழந்தைகளை விற்க புரோக்கராக செயல்பட்ட கொல்லிமலை பவர்காடு ஆரம்ப சுகாதார நிலைய ஆம்புலென்ஸ் டிரைவர் முருகசனும் கைது செய்யப்பட்டார். இவர், கொல்லிமலையில் இருந்து குழந்தைகளை வாங்கி தந்ததும், ஈரோட்டை சேர்ந்த தனியார் மருத்துவமனை நர்ஸ் பர்வீன், பவானியை சேர்ந்த ஹசீனா, அருள்சாமி ஆகிய மூவரும் முருகேசனுக்கு துணை புரோக்கர்களாக செயல்பட்டதும் அம்பலமாகியுள்ளது. சப் -புரோக்கர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் சுமார் 12 குழந்தைகளை இவர்கள் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் மூவரும், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், வறுமையில் உள்ள பெண்களை, குழந்தை இல்லாதவர்களுக்கு கருமுட்டைகளை தானம் தரச்செய்து, அதற்கு 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை கமிஷன் பெற்று வந்துள்ளனர். சட்ட விரோதமாக நடக்கும் குழந்தை விற்பனையின்போது, விற்பவர்கள் - வாங்குபவர்களிடம் நோட்டரி முன்னிலையில், கையொப்பம் பெற்று பத்திரங்கள் செய்து ஆவணப்படுத்தியுள்ளனர். அவற்றை கைப்பற்றியுள்ள போலீசார், குழந்தைகளை விற்ற பெற்றோர் - வாங்கிய பெற்றோர்களை கண்டறிந்து விசாரணை நடத்த உள்ளனர். இதற்கு உடந்தையாக இருந்த வழக்கறிஞரிடமும் விசாரணை நடத்த உள்ளனர். இதனால், இந்த விவகாரத்தில் இன்னும் பலர் சிக்குவார்கள் எனத்தெரிகிறது. விற்கப்பட்ட குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்களில் பெற்றோர்களின் பெயரை மாற்றி மோசடி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதை கண்டறிய, இரண்டாண்டுகளில் ராசிபுரம் நகராட்சியில் வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழ்களை சரிபார்க்கும் பணியை தனிக்குழு செய்து வருகிறது. இதற்கிடையே, 2012ல் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தனியார் மருத்துவமனையில் பிறந்த ஆண்குழந்தை 2வது நாளே காணாமல் போனதாகவும், சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ள, குழந்தையை திருடிச்சென்ற பெண்ணின் உருவ ஒற்றுமை அமுதவள்ளியை போல் ஒத்திருப்பதால், அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக்கோரி குழந்தையின் பெற்றோர் ராசிபுரம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.


play button 00:19 மேஷம்

மேஷம்

play button 01:45 சிதிலமடையும் தென்கரைக் கோட்டை  சிதைக்கப்படும் வரலாறு

சிதிலமடையும் தென்கரைக் கோட்டை சிதைக்கப்படும் வரலாறு

play button 01:25 கும்பகோணம் மாவட்டம் கதி என்ன?

கும்பகோணம் மாவட்டம் கதி என்ன?

play button 00:41 தேசிய டென்னிஸ்; தமிழக வீரர்கள் சாம்பியன்

தேசிய டென்னிஸ்; தமிழக வீரர்கள் சாம்பியன்

play button 01:03 10% இடஒதுக்கீடு அமல்படுத்தவும்: பிராமணர் சங்கம்

10% இடஒதுக்கீடு அமல்படுத்தவும்: பிராமணர் சங்கம்

play button 00:34 தமிழகம்,புதுவையில் 2 நாட்களுக்கு மழை

தமிழகம்,புதுவையில் 2 நாட்களுக்கு மழை

play button 00:41 மாமூலில் புரளும்  சோதனைச்சாவடி; சோதனையில்  அம்பலம்

மாமூலில் புரளும் சோதனைச்சாவடி; சோதனையில் அம்பலம்

play button 04:59 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 19-07-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 19-07-2019 | Short News Round Up | Dinamalar

play button 03:01 பூச்சிகளை அழிக்கும் நவீன கருவி

பூச்சிகளை அழிக்கும் நவீன கருவி

play button 00:32 'சகோதயா' கால்பந்து சந்திரகாந்தி வெற்றி

'சகோதயா' கால்பந்து சந்திரகாந்தி வெற்றி

play button 00:35 கபடியில்  கலக்கிய  சபர்பன்

கபடியில் கலக்கிய சபர்பன்

play button 03:43 விஜய் உடன் நடிக்க விரும்பும் விஜய்

விஜய் உடன் நடிக்க விரும்பும் விஜய்

play button 00:43 மாவட்ட சீனியர் கபடி

மாவட்ட சீனியர் கபடி

play button 00:34 கூடைப்பந்து; சதர்ன்வாரியர்ஸ், பாரத் வெற்றி

கூடைப்பந்து; சதர்ன்வாரியர்ஸ், பாரத் வெற்றி

play button 01:16 குடிநீரில் முறைகேடு; அதிகாரிகள் உடந்தை

குடிநீரில் முறைகேடு; அதிகாரிகள் உடந்தை

play button 01:30 கடாரம் கொண்டான் திரைவிமர்சனம்

கடாரம் கொண்டான் திரைவிமர்சனம்

play button 00:41 10, 12 வகுப்பு தேர்வு தேதி அறிவிப்பு

10, 12 வகுப்பு தேர்வு தேதி அறிவிப்பு

play button 01:49 விளையாட்டு செய்திகள்

விளையாட்டு செய்திகள்

play button 02:22 2 நாடுகள் கொண்டாடும் உலக கோப்பை வெற்றி வீரன்

2 நாடுகள் கொண்டாடும் உலக கோப்பை வெற்றி வீரன்

play button 02:17 துரோகிகள் தெரியும் துரைமுருகன் புலம்பல்

துரோகிகள் தெரியும் துரைமுருகன் புலம்பல்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X