விளையாட்டு » ஹாக்கி லீக் போட்டி நிறைவு ஏப்ரல் 27,2019 20:02 IST
செயின்ட் பால்ஸ் மற்றும் ஒய் எம் சி ஏ இணைந்து நடத்தும் தென் மண்டல அளவிலான ஹாக்கி போட்டிகள் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் 12 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. சனியன்று மாலை நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் பெங்களுரு அணியும் பாண்டிசேரி ஆக்கி அணியும் மோதின. இதில் பெங்களுரு அணி 6க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அடுத்த போட்டியில் சிட்டி போலீஸ் அணியும் சென்னை வருமானவரி துறை அணியும் மோதின. ஆட்ட நேர முடிவில் சென்னை வருமான வரித்துறை அணி 9க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. லீக் போட்டிகள் சனியோடு முடிந்தது திங்கள் முதல் காலிறுதி ஆட்டங்கள் நடைபெறம்
வாசகர் கருத்து