அரசியல் » மம்தாவுக்கு மோடி பகிரங்க எச்சரிக்கை ஏப்ரல் 29,2019 15:00 IST
கொல்கத்தா அருகே நடந்த பிரசாரக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது முதல்வர் மம்தாவுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்தார். ''மே 23-ம்தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கும். அன்று எல்லா இடங்களிலும் தாமரை மலரும். உங்களை ஆட்சியில் இருந்து தூக்கிஎறிய அனைவரும் நினைக்கின்றனர்; உங்கள் எம்.எல்.ஏ.க்களும் உங்களை விட்டுபோய்விடுவர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 40 எம்.எல்.ஏ.,க்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர். ரிசல்ட் வெளியானதும் 40 பேரும் பா.ஜ.வில் சேருவார்கள்'' என்று பிரதமர் அதிரடியாக பேசியது மேற்குவங்க அரசியலில் பரபரப்பை கூட்டியுள்ளது.
வாசகர் கருத்து