சம்பவம் » பூட்டிய கடையில் திடீர் தீ விபத்து ரூ.60 லட்சம் நாசம் ஏப்ரல் 30,2019 12:18 IST
வேலூர் அண்ணா சாலையில் சௌவுகத் அலி என்பவருக்குச் சொந்தமான காலணி, தோல், ரெக்சின் பைகள் மற்றும் பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. திங்களன்று நள்ளிரவு பூட்டிய கடையினுள் இருந்து புகை வந்ததால், தெற்கு காவல் நிலையத்தினர் தீயணைப்புத்துறைக்குத் தகவல் அளித்தனர். கடையின் மேல் பகுதியில் இருந்த தங்கும் விடுதியில் இருந்தவர்களும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர் தீயணைப்பு வீர்கள் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் கடை முழுவதும் எரிந்து, ரூ.60 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது, சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து