சம்பவம் » போலீசார் தாக்கியதில் ஓட்டல் அதிபர் மயக்கம் ஏப்ரல் 30,2019 00:00 IST
திருநெல்வேலி. பேட்டையை அடுத்துள்ள சுத்தமல்லியில் 36 வயதான வேலு என்பவர், ஓட்டல் நடத்தி வருகிறார். திங்களன்று இரவு அங்கு ஞானராஜ் என்ற போலீஸ்காரர் சாப்பிட வந்தார். அப்போது டேபிளை சுத்தம் செய்யுமாறு கூறிய போது, வேலுவிற்கும் ஞானராஜ்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வேலுவை வெளியே இழுத்த ஞானராஜ், ஓங்கி அறைந்ததில் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து அந்த வழியே வந்த ஆட்டோவில் அவரை ஏற்றிய போலீசார், போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று, வழக்கு பதிவு செய்தனர். இக்காட்சிகள் அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. போலீசாரின் இந்த அராஜக செயலை கண்டித்து சுத்தமல்லியில் வியாபாரிகள் கடையடைப்பு மேற்கொண்டனர்
வாசகர் கருத்து