விளையாட்டு » அந்தமான் யோகா : கோவை பெண்கள் சாதனை மே 01,2019 00:00 IST
கடந்த 26 ஆம் தேதி முதல் 4 நாட்களாக அந்தமானில் தேசிய அளவிலான நான்காவது சப் ஜூனியர், சூப்பர் ஜூனியர் பிரிவுகளில் யோகாசன போட்டிகள் நடைபெற்றது. தமிழகத்திலிருந்து 47 பேர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் கோவையை சேர்ந்த ஓசோன் யோகா பயிற்சி மையத்திலிருந்து பாலகிருஷ்ணன் தலைமையில் சென்ற 20 பேர் தங்கப்பதக்கம் வென்றனர். 30 முதல் 40 வயதுடையோருக்கான போட்டியில் கவுசல்யா என்பவர் தங்கப்பதக்கமும், புவனேஸ்வரி என்பவர் வெள்ளி பதக்கமும் வென்றனர். ஆரோக்கியத்திற்காக கற்று கொண்ட பாரம்பரிய யோக பயிற்சி முறையில், இரண்டு பெண்கள் பதக்கம் வென்று, தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
வாசகர் கருத்து