பொது » தலைமை நீதிபதி மீதான புகார் ; பெண் திடீர் 'பல்டி' மே 01,2019 00:00 IST
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய்க்கு எதிராக, நீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர், பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக விசாரிக்க, மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவை, உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது. இந்த குழு, மூன்று நாட்களாக அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில், இனி ஆஜராகப் போவதில்லை என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட அப்பெண், சில முக்கிய பிரச்னைகள் கருதி, நீதிபதிகள் குழு முன், இனி ஆஜராவது இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
வாசகர் கருத்து