பொது » குழந்தை விற்பனை வழக்கு: சி.பி.சி.ஐ.டி., விசாரணை மே 03,2019 16:50 IST
ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கை விசாரிக்க சேலம் சி.பி.சி.ஐ.டி., துணை காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணன், சேலம் இன்ஸ்பெக்டர் சாரதா, நாமக்கல் பிருந்தா ஆகியோரை சி.பி.சி.ஐ.டி., நியமனம் செய்துள்ளது. இவர்கள் வெள்ளியன்று நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசுவை சந்தித்து வழக்கின் ஆவணங்களை பெற்றுக் கொண்டனர். இதுவரை நடைபெற்ற வழக்கின் முழுவிவரங்களை அறிந்து அவர்கள் சார்பில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விட்டு வெள்ளியன்று மாலைக்குள் விசாரணையை துவக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தை விற்பனை வழக்கில் இதுவரை அமுதவல்லி, கணவர் ரவிச்சந்திரன், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் முருகேசன், இடைத்தரகர்கள் பர்வீன், நிஷா, லீலா, அருள்மணி, செல்வி ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கொல்லிமலை பகுதியில் இருந்து 10 குழந்தைகள் விற்றதும், மதுரை, திருச்சி, ஈரோடு பகுதிகளில் 4 குழந்தைகளை விற்றதும், இலங்கையில் ஒரு குழந்தையை விற்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சி.பி.சி.ஐ.டி., விசாரணையில் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாசகர் கருத்து