பொது » ஆற்றில் பாய்ந்த விமானம்; 136 பேர் தப்பினர் |Boeing 737 slides |into Florida river after landing மே 04,2019 12:20 IST
அமெரிக்காவில் 136 பயணிகளுடன் போயிங் ரக விமானம் ஆற்றில் பாய்ந்தது. கியூபா நாட்டிலிருந்து புறப்பட்ட 737 போயிங் விமானம் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள Jacksonville ஜாக்சன்வில் கடற்படை விமானத்தளத்தில் வெள்ளி இரவு வந்திறங்கியது. சக்கரங்கள் திடீரென வழுக்கியதால் ஓடுபாதையிலிருந்து விலகி ஓடிய விமானம், அருகிலுள்ள செயின்ட் ஜான்ஸ் ஆற்றில் பாய்ந்தது. சம்பவம் நடந்தபோது சரியாக இரவு 9.40 மணி. விமானம் மூழ்கவில்லை. ஆழமற்ற பகுதியில் நின்றது. ''தனியாருக்கு சொந்தமான அந்த வாடகை விமானத்தில் 136 பயணிகள் இருந்தனர். 21 பேருக்கு காயம் ஏற்பட்டது. உயிரிழப்பு ஏதுமில்லை; அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என, ஜாக்சன்வில் மேயர் தெரிவித்தார். சமீப காலமாக போயிங் ரக விமானங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாவது உலகளவில் பயணிகளை கவலையடைய வைத்துள்ளது.
வாசகர் கருத்து