அரசியல் » மூன்று மாதத்தில் உள்ளாட்சி தேர்தல்; முதல்வர் தகவல் மே 05,2019 13:26 IST
தமிழகத்தில் 3 மாதத்தில் உள்ளாட்சித்தேர்தல் நிச்சயம் நடைபெறும்; உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க அதிமுக எப்போதும் தயாராக இருக்கிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் மீது சபாநாயகரிடம் அதிமுக புகார் அளித்தால், சம்பந்தமே இல்லாமல் திமுக தலைவர் ஸ்டாலின் ஏன் கொதிக்கவேண்டும். இதன்மூலம் திமுகவிற்கும் அமமுகவிற்கும் உள்ள தொடர்பு வெட்ட வெளிச்சமாகிவிட்டது. தோல்வி பயத்தால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதாக ஸ்டாலின் கூறுகிறார் எனமுதல்வர் கூறினார். இயற்கை ஒத்துழைத்தால் மேட்டூர் அணையில் இருந்து, குறுவை பாசனத்திற்காக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி கூறினார்.
வாசகர் கருத்து