பொது » முன்னாள் எம்.பி., கோவை ராமநாதன் மறைவு மே 10,2019 17:00 IST
தி.மு.க., உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பி.,யுமான கோவை ராமநாதன் காலமானார். அவருக்கு வயது 87. உடல்நிலை சரியில்லாமல் இரண்டு ஆண்டுகளாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த அவர், வெள்ளியன்று உயிரிழந்தார். கோவை தென்றல் என அழைக்கப்படும் ராமநாதன், எம்.பி., எம்.எல்.ஏ., எம்.எல்.சி., உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய தி.மு.க., தலைவர் ஸ்டாலின், இந்தி எதிர்ப்பு, மிசா போராட்டங்களில் பங்கேற்று தி.மு.க.,வின் முன்னோடியாக விளங்கியவர் என்றும், தொடர்ந்து 6 மணி நேரம் வரை கூட பேசும் ஆற்றல் பெற்றவர் என்றும் தெரிவித்தார். ராமநாதன் தி.மு.க.,வின் பல்கலைக்கழகம் என்றும் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
வாசகர் கருத்து