சம்பவம் » கோர்ட்டுக்கு வந்த 2 பேருக்கு அரிவாள் வெட்டு; 4 பேருக்கு வலை மே 14,2019 12:45 IST
கோவை, கணபதி அருகே காமராஜர் நகரை சேர்ந்த பிரதீப், தமிழ்வாணன் இருவரும், அடிதடி வழக்கில் சிக்கி, கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர். செவ்வாயன்றும், வழக்கம்போல் இருவரும் கோர்ட்டில் கையெழுத்திட்டுவிட்டு, அவினாசி சாலையில் உள்ள சிஎஸ்ஐ சர்ச் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்களை பின்தொடர்ந்து 2 இரண்டு சக்கர வாகனங்களில் வந்த 4 பேர், பிரதீப், தமிழ் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். ரத்தம் பீரிட்டு சரிந்து விழுந்த இருவரும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரித்த வரும் ரேஸ்கோர்ஸ் போலீசார், அரிவாளால் வெட்டிய 4 பேரையும் தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர்.
வாசகர் கருத்து