சம்பவம் » இன்ஸ்பெக்டருடன் சண்டை போட்ட ஆட்டோ டிரைவர் கைது மே 15,2019 00:00 IST
ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை சந்திப்பில் டிராபிக் இன்ஸ்பெக்டர் விஜயகாந்த் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அந்த வழியாக வந்த துத்திவலசையைச் சேர்ந்த சரக்கு ஆட்டோ டிரைவர் கர்ணனின் ஆட்டோவை சோதனையிட முயன்றார். இதையடுத்து, இன்ஸ்பெக்டருடன் வாக்குவாதம் செய்த கர்ணன், நடுரோட்டில் இன்ஸ்பெக்டரை கீழே தள்ளி கட்டிப் புரண்டு சண்டை போட்டார். சக காவலர்கள், கர்ணனுக்கு அடியில் சிக்கிக் கொண்ட, இன்ஸ்பெக்டர் விஜயகாந்தை காப்பாற்றி, மருத்துவமனையில் சேர்த்தனர். டிரைவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து