சம்பவம் » நிதி நிறுவனம் நடத்தியவர் தற்கொலை; போலீசே காரணம் என வீடியோ பதிவு மே 15,2019 20:00 IST
சேலம் ஆத்தூர் விநாயகபுரத்தில், நிதி நிறுவனம் நடத்தி வந்த தி.மு.க., உறுப்பினர் பிரேம்குமார் செவ்வாயன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மரணத்திற்கு முன்பு, மொபைலில் வீடியோ பதிவு செய்துள்ள அவர், தில்லைநகரை சேர்ந்த ராஜ்குமார் பணம் வாங்கி ஏமாற்றியதாகவும், அதை கேட்டபோது சாதி பெயரை சொல்லி திட்டியதாக ஆத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தாகவும் கூறியுள்ளார். போலீசார் தன்மீதும், தனது சகோதரர் மீதும் பொய் வழக்கு பதிவு செய்ததாகவும், ஆத்தூர் டிஎஸ்பி., ராஜூ மற்றும் இன்ஸ்பெக்டர் கேசவன் மிரட்டுவதால், பிரியாவிடை பெறுவதாக கூறியுள்ளார். பிரேம்குமாரின் மகன் அளித்த புகாரையடுத்து, சேலம் எஸ்.பி., தீபிகா கனிகர் ஆத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பொறுப்பை ஊரக காவல்நிலைய ஆய்வாளர் முருகேசனுக்கு மாற்றி முதற்கட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்.
வாசகர் கருத்து