அரசியல் » கமல் வழக்கில் நீதிமன்றம் தலையிடாது மே 16,2019 00:00 IST
மக்கள் நீதி மய்ய கட்சித்தலைவர் கமலஹாசன் அமைதியை குலைக்கும் வகையில் பேசி வருவதால், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தடை விதிக்க கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணன், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் நிஷாபானு, தண்டபாணி அமர்வில் விசாரித்தனர். ஏற்கனவே இது தொடர்பான வழக்கை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்ததை சுட்டிகாட்டிய நீதிபதிகள், இது குறித்து தேர்தல் ஆணையமே முடிவெடுக்க வேண்டும். இதில் ஐகோர்ட் தலையிட இயலாது. ஆகவே, இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க இயலாது என, நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து