அரசியல் » ராகுல்- நாயுடு சந்திப்பு; சூடுபிடித்தது டில்லி மே 18,2019 19:03 IST
லோக்சபா தேர்தல் ரிசல்ட் மே 23ம்தேதி வெளியாகிறது. மத்தியில் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யாரு? என்ற ஆவல் அதிகரித்துள்ளது. 2வது முறை ஆட்சியமைப்போம் என பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறிவிட்டார். மீண்டும் தீவிர அரசியலில் களமிறங்கியுள்ள சோனியா, டில்லியில் 23ம்தேதி எதிர்க்கட்சிகள் கூட்டத்தை கூட்டியுள்ளார். காங்கிரசுக்கு பக்கபலமாக, எதிர்க்கட்சித் தலைவர்களிடையே இணக்கத்தை ஏற்படுத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் களமிறங்கியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல், கெஜ்ரிவால், சீதாராம் யெச்சூரி, அகிலேஷ், மாயாவதி, சரத்பவார் உள்ளிட்ட தலைவர்களை வரிசையாக அவர் சந்தித்து வருவதால் டில்லி அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
வாசகர் கருத்து