சம்பவம் » 41.50 லட்சம் ரூபாய் தங்கம் பறிமுதல் மே 19,2019 19:22 IST
கோலாலம்பூர் மற்றும் துபாயில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது உடலில் ஆசனவாயில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தவர்கள் சிக்கினார்கள் . ராமநாதபுரத்தை சேர்ந்த ஹக்கீம், நாகூர், அராபத் ஆகியோரிடம் இருந்து 41.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1300 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து