விளையாட்டு » மாநில கோ-கோ 'ப்ரோ-லீக்' போட்டி மே 20,2019 17:34 IST
தமிழ்நாடு கோ- கோ அசோசியேஷன் சார்பில், கோ- கோ போட்டியில் வளர்ந்து வரும் வீரர்களை, அடுத்த கட்ட நிலைக்கு கொண்டு செல்லும் வகையில், தமிழ்நாடு கோ-கோ 'ப்ரோ- லீக்' தொடர் அறிமுகப்படுத்தப்பட்டது. கோவை அருகே அத்திபாளையம் ரங்கநாதர் பாலிடெக்னிக் கல்லுாரியில் போட்டிகள் நடந்தன. ஆண்கள் பிரிவில் சென்னை அணி, 7க்கு ஆறு போட்டிகளில் வென்று முதலிடத்தை பிடித்தது. கோவை அணி, ஐந்து வெற்றியுடன் இரண்டாமிடத்தையும் மதுரை 3ம் இடத்தையும் பிடித்தன. பெண்கள் பிரிவில் கோவை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
வாசகர் கருத்து