அரசியல் » ஜீரோவில் இருந்து ஹீரோ ஆன திமுக|TN Lokshaba Constituency DMK Won மே 23,2019 20:38 IST
வேலூர் தொகுதியை தவிர்த்து தமிழகத்தில் 38 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில், வெற்றி முன்னிலை என, 37 இடங்களை திமுக கைப்பற்றுகிறது. தேனி தொகுதியில் மட்டும் அதிமுக ஜெயித்தது. அங்கு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஓ.பி.எஸ். மகன் ரவிந்திரநாத் தோற்கடித்தார்., மற்றபடி அதி முக அணியில் பா.மக ,பாரதிய ஜனதா, தேமுதிக போட்டியிட்ட எல்லா இடத்திலும் தோல்வியைத் தழுவின.. திருமாளவளனும், அதிமுக வேட்பாளர் சந்திரசேகரும் மாறி மாறி முன்னிலை பெறுவதால், சிதம்பரம் தொகுதியில் இழுபறி நீடிக்கிறது. தூத்துக்குடியில் கனிமொழி, மத்திய சென்னையில் தயாநிதி, திருச்சியில் திருநாவுக்கரசு, சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், கன்னியாகுமரியில் வசந்தகுமார் உள்ளிட்டோர் திமுக கூட்டணியில் வெற்றிபெற்ற விஐபி வேட்பாளர்கள். புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் வாகை சூடினார்.
வாசகர் கருத்து