பொது » பழங்கால வாகனங்களின் கண்காட்சி மே 24,2019 00:00 IST
திருச்சி வாகன உதிரி பாகங்கள், விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில், இந்தியா முழுவதும் இருந்து, 120 கம்பெனிகள் சார்பில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. பளபளக்கும் பழங்கால கார்கள், ஜீப்புகள், தாத்தா காலத்து ஸ்கூட்டர், புல்லட், எஸ்டீ, ஜாவா போன்ற இருசக்கர வாகனங்களும், வெளிநாட்டு பைக்குகளும் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்ததோடு, வாகனங்களோடு செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். மே 26 ஆம் தேதி, பைக் ஸ்டண்ட் ஷோ நடைபெற உள்ளது. இது குறித்து கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், ஆட்டோ மொபைல் துறையில் உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியை, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நடத்துகிறோம் என்றனர்.
வாசகர் கருத்து