பொது » அரசு பள்ளியில் படிப்பதே நல்லது மே 25,2019 13:58 IST
அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள்கூட சாதிக்க முடியாததை, அரசு பள்ளியில் படித்த இந்திய விஞ்ஞானிகள் சந்திராயனை விண்வெளிக்கு அனுப்பி சாதித்துள்ளனர் என்று, இஸ்ரோ விஞ்ஞானி, மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம் தெரிவித்தார். அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு தகுதியும் திறமையும் அதிகமாக உள்ளது. இப்போது, கல்விதரமும் உயர்ந்து வருவதால், அரசு பள்ளியில் பிள்ளைகள் படிப்பதை பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும் என்றார். முன்னதாக, அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்து கொடுக்கும் முறையை ரத்து செய்யக்கோரியும், காலி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரியும் கோவை காந்திபுரத்தில், இந்திய மாணவர் சங்கத்தினர் நடத்திய சைக்கிள் பேரணியை, மயில்சாமி அண்ணாதுரை துவக்கி வைத்தார்.
வாசகர் கருத்து