பொது » அகிலா ரொம்ப ஹேப்பி அண்ணாச்சி | Elephant Shower Bath | Trichy | Dinamalar மே 25,2019 00:00 IST
திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் யானை அகிலாவுக்கு 17 வயதாகிறது. எட்டாண்டுகளுக்கு முன், இக்கோயிலுக்கு கொண்டு வரப்பட்ட அகிலா யானை, பக்தர்களின் செல்லமாக வலம் வருகிறது. சமீபத்திய வெப்பத்தால் அகிலா கடுமையாக பாதிக்கப்பட்டதால், வனத்துறை ஆலோசனை படி, ஷவர்பாத் அமைக்கப்பட்டுள்ளது. வனத்துறையின் புத்துணர்வு முகாமிலும் ஷவர் பாத்தை விரும்பும் அகிலாவுக்கு கோயில் வளாகத்திலேயே ஷவர்பாத் ஒரு லட்ச ரூபாய் செலவில் ஷவர்பாத் அமைக்கப்பட்டது. அதைப் பார்த்த குஷியில், ஜல் ஜல் என சலங்கை ஒலி சப்திக்க, ஒய்யார நடை போட்டு ஷவரை நோக்கி செல்கிறாள் அகிலா.
வாசகர் கருத்து