அரசியல் » கட்கரிக்கு முதல்வர் நன்றி மே 26,2019 13:40 IST
மத்திய அமைச்சரவையில் மீண்டும் பொறுப்பேற்றதும், கோதாவரி--கிருஷ்ணா நதிகளை இணைப்பதுதான் எனது முதல் வேலை என கூறியுள்ளார் நிதின்கட்காரி. இந்த திட்டத்தை செயல்படுத்துவதால் தமிழகத்துக்கு தங்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும் என குறிப்பிட்டார். இதற்கு தலைவர்கள் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், தமிழக முதல்வர் பழனிச்சாமி தனது டுவிட்டர் பக்கத்தில், கோதாவரி-கிருஷ்ணா நதிகள் இணைப்பு அறிவிப்பிற்காக, நிதின் கட்கரிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து